தேசிய செய்திகள்

கீழ் திருப்பதியில் 9 இடங்களில் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டிக்கெட் விநியோகம் - தேவஸ்தானம் தகவல்

நாளொன்றுக்கு 45 ஆயிரம் டோக்கன்கள் வீதம், 10 நாட்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 2-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு, ஏற்கனவே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இலவச தரிசனத்திற்கான டிக்கெட் கீழ் திருப்பதியில் நாளை மதியம் முதல் 9 இடங்களில் மொத்தம் 92 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.

இதில் நாளொன்றுக்கு 45 ஆயிரம் டோக்கன்கள் வீதம், 10 நாட்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களை உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்