தேசிய செய்திகள்

‘மராட்டிய சட்டமன்றத்தில் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கப்படும்’ - தேவேந்திர பட்னாவிஸ்

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் வந்தே மாதரம் மதிக்கப்படுகிறது என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

தினத்தந்தி

மும்பை,

நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கப்படும் என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல, அது இந்தியாவின் சுதந்திரம் மற்றும் தேசியவாதத்தின் மந்திரம். அந்த பாடலின் 150-வது ஆண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதம் நடைபெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மராட்டிய மாநிலத்தின் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இது பற்றி விவாதிக்கப்படும்.

வந்தே மாதரம் ஒருபோதும் தடை செய்யப்படவில்லை. அதற்கு ஏதேனும் தீங்கு அல்லது சேதம் ஏற்பட்டிருந்தால் அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு. வந்தே மாதரத்தைக் குறைத்து, அதில் பாதி மட்டுமே பாடப்படும் என்று கூறி காங்கிரசே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் வந்தே மாதரம் மதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு