லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் சாலேபூர் கோட்லா கிராமத்தை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் திருமண விழாவில் கலந்து கொண்டு வேனில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
சாதிக்பூர் என்ற பகுதி அருகே சென்றபோது வேனும், எதிரே வந்த லாரியும் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த 8 முதல் 14 வயதுடைய 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்தார். 15 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.