தேசிய செய்திகள்

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல்

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய சட்டத்தை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கடந்த 1-ந்தேதி தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஏ.ஆர்.கோகுல்ராஜ் என்பவர் சார்பில் வக்கீல் பாலாஜி ஸ்ரீநிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ராஜன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்