வாரணாசி,
உத்தரப்பிரதேசம் வாரணாசியின் பஹாரியா மண்டி பகுதியில் வாக்கு எண்ணும் மையம் முன்பு சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்கு எந்திரத்தில் குளறுபடி செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், வாக்கு எண்ணும் மையம் முன்பு சமாஜ்வாதி கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில வாரணாசி மாவட்ட ஆட்சியர் கவுசால் ராஜ் சர்மா அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.