தேசிய செய்திகள்

வாகன மாசு கட்டுப்பாடு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை

வாகன மாசு கட்டுப்பாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வாகனங்கள் வெளியேற்றும் மாசு காரணமாக நாட்டில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் கடந்த 13ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தபோது, சரக்கு வாகனங்கள் தவிர மற்ற 4 சக்கர வாகனங்களுக்கு டீசல் விலையில் சிறிது மாற்றம் செய்யலாமே என்று யோசனை தெரிவித்து இருந்தது.

இதற்கு, நேற்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ். நட்கர்னி பதில் அளிக்கையில், இதுபோன்று டீசல் விலையை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வது சாத்தியமற்றது என்றார்.

மேலும், தற்போது வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக பி.எஸ்6 ரக வாகனங்கள் தயாரிப்பதையோ, விற்பனை செய்வதையோ 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் நிறுத்திட உத்தரவிடும்படியும் மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுத்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்