தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன் வெங்கையா நாயுடு சந்திப்பு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அப்போது மன்மோகன்சிங்கின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

மன்மோகன்சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். உடல்நிலை சரியில்லாததால், அவர் நீண்ட நாட்களாக மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

வெங்கையா நாயுடு, மாநிலங்களவை தலைவராகவும் இருப்பதால், அவரை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக வாழ வாழ்த்து தெரிவித்தார்.

SCROLL FOR NEXT