தேசிய செய்திகள்

செனகல் அதிபருடன் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

செனகல் அதிபருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடத்திய பேச்சுவார்த்தையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினத்தந்தி

டாகர், 

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கபோன் நாட்டை தொடர்ந்து நேற்று முன்தினம் செனகல் நாட்டுக்கு சென்றார்.

நேற்று அவர் செனகல் அதிபர் மேக்கி சால்லுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வேளாண்மை, சுகாதாரம், பாதுகாப்பு, ரெயில்வே உள்ளிட்ட விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

இரு தலைவர்களின் முன்னிலையில், 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. விசா இல்லாமல் அதிகாரிகள் பயணம், இளைஞர் விவகாரத்தில் ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக அந்த ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. வெங்கையா நாயுடு, டாகர் நகரில் அட்லாண்டிக் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அங்குள்ள கருப்பின நாகரீகத்தின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். ஆப்பிரிக்க மறுமலர்ச்சி நினைவுச்சின்னத்துக்கு சென்றார். மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது