கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

சோனியாவுடன் வேணுகோபால் 'திடீர்' சந்திப்பு: பேசியது என்ன?

கேரள மாநிலத்தை சேர்ந்த கே.சி.வேணுகோபால், சோனியா காந்தியை சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கேரளாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டிருந்தவர், அந்த கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால்.

இந்த நிலையில் அவர் நேற்று திடீரென டெல்லி சென்றார். அங்கு அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியது என்ன என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் சந்தித்து, கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதே கேரள மாநிலத்தை சேர்ந்த கே.சி.வேணுகோபால், சோனியா காந்தியை சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சோனியாவும், கே.சி.வேணுகோபாலும் கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாகவே பேசியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு