தேசிய செய்திகள்

டெல்லியில் 'மிகவும் மோசமான' காற்றின் தரம்: வானிலை மையம் தகவல்

டெல்லியில் இன்று காற்றின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. ஒரு அடர்த்தியான மூடுபனி தேசிய தலைநகரை சூழ்ந்துள்ளது

இன்று காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 334 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாகவே இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் உத்தரகாண்ட், கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவில் இன்று காலை கடும் மாசுபாடு காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு