மும்பை,
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தற்போது 94 வயதாகும் அவர், வயோதிகம் காரணமாக அடிக்கடி நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், திடீரென நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று மாலை அவர் லீலாவதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பின்னர், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திலீப்குமாரின் மனைவி சாய்ரா பானு உடனிருந்து அவரை கவனித்து வருகிறார்.