தேசிய செய்திகள்

டெல்லியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி ஜந்தர் மந்தரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வக்கீல்கள் அமைப்பான சமத்துவ வக்கீல் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சாதி ஆணவக்கொலைகளை தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும், சென்னையில் சுப்ரீம்கோர்ட்டு கிளை அமைக்க வேண்டும், நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய திருமாவளவன், ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்