தேசிய செய்திகள்

அரசுமுறை பயணமாக வியட்நாம் பிரதமர் இந்தியா வருகை

வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புது டெல்லி,

வியட்நாம் பிரதமர் பாம்மின் சின் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று இரவு புதுடெல்லி வருகை தந்தார். இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளில் வியட்நாம் பிரதமர் பங்கேற்க உள்ளார். அவருக்கு நாளை கவர்னர் மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

நாளை மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்த ராஜ்காட் செல்லும் அவர், பின்னர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார். தொடர்ந்து தனது பயணத்தின் போது ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ஆகியோரையும் பாம்மின் சின் சந்திக்க உள்ளார். வியட்நாம் பிரதமரின் இந்திய பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நல்ல உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்