தேசிய செய்திகள்

பெண் கைதி கன்னித்தன்மையை பரிசோதிப்பது சட்ட விரோதம் - டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு

பெண் கைதி கன்னித்தன்மையை பரிசோதிப்பது சட்ட விரோதம் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரளாவில் 1992-ம் ஆண்டு அபயா என்ற கன்னியாஸ்திரி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். இவரது சாவு தொடர்பான குற்ற வழக்கில் மற்றொரு கன்னியாஸ்திரியான செபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவரை 2008-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை பரிசோதனைக்கு சி.பி.ஐ. உட்படுத்தியதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கன்னியாஸ்திரி செபி முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா நேற்று தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில் "ஒரு பெண் கைதியை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ஐ மீறிய செயல்" என கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து