தேசிய செய்திகள்

வோடோபோன் - ஐடியா இணைப்பு நிறைவு, நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக மாறியது

வோடோபோன் - ஐடியா இணைப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த இணைப்பு மூலம் நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக மாறியுள்ளது.

தினத்தந்தி

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன் தனது இந்திய பிரிவை ஐடியா நிறுவனத்துடன் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.. சந்தையில் நிலவி வரும் கடுமையான போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த முயற்சியில் வோடோபான் ஈடுபட்டது.

இதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வந்தன. இந்த இரு பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் இணைப்புக்கான அனைத்து ஒப்புதல்களும் கிடைத்துள்ளது. இதையடுத்து, இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும் என தெரிகிறது.

வோடோபோன் ஐடியா லிமிடெடு என்ற பெயரில் செயல்படும் நிறுவனத்தில், 12 இயக்குநர்கள் கொண்ட புதிய போர்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 12 பேரில் 6 பேர் தன்னிச்சையான இயக்குநர்கள் ஆவர். நிறுவனத்தின் தலைவராக ஆதித்ய மங்கலம் பிர்லா இருப்பார். பலேஷ் சர்மா நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு