லக்னோ,
விவசாயிகள் சங்க தலைவர்
உத்தரபிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஆளும் பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்தியவரும், பாரதிய கிசான் யூனியன் சங்க தலைவருமான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகேஷ் திகாயத் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது உத்தரபிரதேச தேர்தல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்து-முஸ்லிம் பிரிவினை
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். தங்கள் விளைபொருட்களுக்கு குறைவான விலையை பெறுவதுடன், அதிகமான மின்கட்டணம் செலுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.
விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள், விலைவாசி உயர்வால் அவதிப்படும் நடுத்தர வர்க்கத்தினர் பான்ற பிரச்சினகள்தான தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், ஜின்னா, பாகிஸ்தான் என இந்து-முஸ்லிம் ரீதியாக வாக்காளர்களை பிரிக்கும் முயற்சிகள்தான் நடந்து வருகிறது. இதை தொடர்ச்சியாக செய்து வருவோருக்கு, தேர்தலில் இது கைகொடுக்காது, மாறாக தீங்குதான் விளைவிக்கும்.
விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை
நான் அரசியல்வாதி அல்ல, எனவே அரசியல் கட்சிகளிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறேன். அதேநேரம், விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்து, அது குறித்து தங்கள் தலைவர்களிடம் கேள்வி எழுப்புமாறு மக்களை அறிவுறுத்துகிறேன். விவசாயிகளின் பிரச்சினையை தொடர்ந்து நான் எழுப்புவேன்.
இந்த தர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று நான் கருத்து கூற மட்டேன். ஆனாலும், தற்போதைய அரசில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்களின் குழந்தைகளுக்கு எங்குமே வேலைவாய்ப்பு இல்லை. எனவே இது தேர்தலில் எதிரொலிக்கும் என கருதுகிறேன்.
இந்து-முஸ்லிம் என பிரிவினையை ஏற்படுத்தாதவர்களை, விவசாயிகளுக்கு எதிராக இல்லாதவர்களை, அவர்களின் நலன்களை நாடுவோரை மக்கள் ஆதரிக்க வேண்டும். பாகிஸ்தான், ஜின்னா என்று பேசாமல், மக்களின் பிரச்சினைகளை பேசுவோருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.