தேசிய செய்திகள்

போர் பதற்றம்; மும்பைக்கு திருப்பி விடப்பட்ட டெல்லி-டெல் அவிவ் விமானம்

எதிர்பாராத சூழல்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்தம் தெரிவிப்பதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

மும்பை,

ஈரானில் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும் கமேனி ஆட்சியை எதிர்த்தும், அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். அந்நாட்டு அரசு, போராட்டக்காரர்கள் மீது, ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் ஈரானை தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வந்தார். மேலும், அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்' என்று ஈரான் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.

இது தொடர்பாக, ஓமன் நாட்டின் முயற்சியால் ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர், ஈரான் மீது தாக்குதலை தொடங்கினர்.

தலைநகர் தெஹ்ரான் மற்றும் ஜோம்ஹாரி பகுதிகளில் அடுத்தடுத்து பல ஏவுகணைகள், குண்டுகள் வந்து விழுந்தன. ஈரான் அதிபரின் இல்லம், உளவுத்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு எங்கள் விமானங்களின் இயக்கங்களை தேவைக்கேற்ப முன்கூட்டியே சரிசெய்வோம். இந்த எதிர்பாராத சூழ்நிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஈரான் மற்றும் அதன் வான்வெளி தொடர்பான நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப விமானங்களின் இயக்கத்தில் தேவையான மாற்றங்களை செய்வோம். பயணிகள் புறப்படுவதற்கு முன் தங்கள் விமானங்களின் பயண நிலைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.