தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலையின்போது மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளானேன்-மத்திய சுகாதார மந்திரி தகவல்

இந்தியாவில் கடந்த ஏப்ரல்,மே மாத கால கட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் உச்சத்தில் இருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

குழந்தைகளின் மனநலம் குறித்த யுனிசெப் அமைப்பின் வருடாந்திர நூல் வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதை தொடங்கிவைத்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, கொரோனா 2-வது அலையின்போது நான் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரியாக இருந்தேன்.

2-வது அலை உச்சத்தில், அத்தியாவசிய மருந்துகள் கோரி பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் தினமும் செய்யும் தொலைபேசி அழைப்புகளால் திணறிப்போனேன். ஆஸ்பத்திரி நிர்வாகங்களிடம் பேசுமாறும் பலர் தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பார்கள். அந்த காலகட்டத்தில் நான் மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளானேன். என் மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டது என்று கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்