இதற்கு பதில் அளித்து நளின்குமார் கட்டீல் எம்.பி. கூறியதாவது:-
அம்பேத்கருக்கு அவமானம் செய்தது காங்கிரஸ் கட்சி தான். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஏன் தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்கவில்லை. பரமேஸ்வர், மல்லிகார்ஜூனகார்கே, துருவநாராயண் ஆகியோரில் ஒருவரை முதல்-மந்திரி ஆக்கியிருக்கலாம். ஆனால் அதனை சித்தராமையா விரும்பவில்லை. தலித்கள் பற்றி பேச சித்தராமையாவுக்கு எந்த தகுதியும் கிடையாது.
பா.ஜனதா கட்சி அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறது. முஸ்லிமாக இருந்த அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி வழங்கியது. தற்போது ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் ஒரு தலித். மத்திய மத்திரியாக நியமிக்கப்பட்ட நாராயணசாமியும் தலித் தான். நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.