தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி

போலீஸ் நிலையத்தில் போலீசார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

தினத்தந்தி

போபால்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் ராஜவத் ( வயது 25) அவரது நண்பர் மான் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டனர். இவரகள் இருவரும் பிகிந்த் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக சிறைக்கு வெளியே அமரவைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் ராஜவத் அங்கு இருந்த 2 போலீஸாரைத் தாக்கிவிட்டு ஓடிவிட்டார், ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு பிடிபட்டார். ராஜவத்

தாக்கியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ராஜவத் போலீசாரை தாக்கும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை