தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: கெஜ்ரிவால்

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. தொற்று பரவல் குறைந்து உள்ளதையடுத்து, அங்கு தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, வரும் திங்கள் கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், சந்தைகள் சில கட்டுப்பாடுகள் செய்ல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த பிறகு பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளது என்றார்.

மேலும், கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் 19,420 டன்கள் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. 150 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக இந்திரபிரசதா கேஸ் லிமிடெட் நிறுவனத்திடம் பேசியுள்ளோம். புதிய வகை தொற்று பாதிப்பை கண்டறிய மரபணு வரிசையை கண்டறியும் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை