தேசிய செய்திகள்

"பாரதியாரின் கனவுகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம்" - பிரதமர் மோடி டுவீட்

பாரதியாரின் கனவுகளை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அன்னாரை நான் வணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக 'மகாகவி பாரதியார்' விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை