புதுடெல்லி,
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று 143-வது பிறந்த தினம் ஆகும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் டெல்லியில் அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் படேலுக்கு தலை வணங்க வேண்டும். இந்தியாவின் ஒருங்கிணைத்ததோடு, நாட்டுக்காக ஓய்வின்றி உழைத்தவர் சர்தார் வல்லபாய் படேல் என்று தெரிவித்துள்ளார்.