தேசிய செய்திகள்

37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரிப்பு- மத்திய சுகாதாரத்துறை

டந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2 வாரங்களில் நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதில் அதிகபட்சமாக கேரளம், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாவட்டங்கள் உள்ளன. கேரளத்தில் 11 மாவட்டங்களும், கர்நாடகத்தில் 5 மாவட்டங்களும் கடந்த 2 வாரங்களில் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 1,77,091 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றார்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது