தேசிய செய்திகள்

தந்தையின் சேவையை தொடர விரும்புகிறோம் - மனோகர் பாரிக்கரின் மகன்கள் அறிவிப்பு

தந்தையின் சேவையை தொடர விரும்புகிறோம் என மனோகர் பாரிக்கரின் மகன்கள் அறிவித்தனர்.

தினத்தந்தி

பனாஜி,

மறைந்த கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் மகன்கள் உத்பால், அபிஜத் பாரிக்கர் ஆகியோர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தந்தை இறந்தது மிகப்பெரிய சோகம். எங்கள் குடும்பத்தின் மீது காட்டப்பட்ட அன்பும், ஆதரவும் அதிலிருந்து மீண்டுவர உதவியது. எங்கள் தந்தை ஒவ்வொரு நாளும் உறுதியுடன் இந்த மாநிலத்துக்கும், நாட்டுக்கும் சேவை செய்வதை விரும்பினார். இறுதிவரை மாநில பிரச்சினைகள் தொடர்பான சிந்தனையிலேயே இருந்தார்.

எங்கள் தந்தையின் வாழ்க்கையை பெருமைப்படுத்தும் வகையில் நாங்கள் அவர் விட்டுச்சென்ற மாநிலத்துக்கும், நாட்டுக்கும் சேவையை தொடர விரும்புகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது