தேசிய செய்திகள்

பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பள்ளிகள், நுழைவு தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அரசியல் சாசன சட்டப்படி ஆதார் அடையாள அட்டை செல்லும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அவசியம் கிடையாது. மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), நீட், பல்கலைக்கழக மானிய குழு ஆகியவை நடத்தும் தேர்வுகளுக்கு ஆதாரை இணைக்கவேண்டியது இல்லை என்றும் உத்தரவிட்டது. தீர்ப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், ஆதார் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், குடிமக்களின் தனி மனித உரிமைகளை முடக்கும் பிரிவுகளை நீக்கியும், அவர்களின் ஒப்புதல்களை அவசியமாக்கும் அளவில் இருப்பதும் ஆறுதல் அளிக்கிறது. பள்ளிகளுக்கும், நுழைவுத்தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாயம் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து