தேசிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: அணை கட்டும் பணியை தொடங்குவோம் - வாட்டாள் நாகராஜ்

சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றை கொண்டு மேகதாதுவில் நாங்களே அணை கட்ட துவங்குவோம் என்று கன்னட அமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ்,

மேகதாது மற்றும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக தமிழகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து வருகிற 12 ஆம் தேதி, கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

மேலும், கர்நாடக அரசு உடனடியாக மேகதாது அணைக்கான பணிகளை தொடங்காவிட்டால், தங்களது இயக்கத்தின் சார்பில் சிமெண்ட், மணல், ஜல்லி, செங்கல் ஆகியவற்றை கொண்டு அணை கட்டும் பணியை தொடங்குவேம் என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை