உதய்பூர்,
நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பதவி ஏற்கிறது.
இந்தநிலையில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிரம் காட்டுகிறது. இதை ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உறுதி செய்தார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ராமர் (கோவில் கட்டும்) பணியை செய்ய வேண்டியது இருக்கிறது. ராமர் (கோவில் கட்டும்) பணியை செய்தே தீருவோம் என சூளுரைத்தார்.
மேலும், நம் ஒவ்வொரிடத்திலும் ராமர் இருக்கிறார். அவரது பணியை செய்வது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் குறிப்பிட்டார்.