தேசிய செய்திகள்

“காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம்” கர்நாடக அரசு அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடைபெற்றது. அதில், மத்திய மந்திரிகளும், மாநில அட்வகேட் ஜெனரலும் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எங்கும் சொல்லவில்லை. அதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

காவிரி வழக்கு தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், ஷ்யாம் திவான் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, இம்முடிவு எடுக்கப்பட்டதாக மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு