தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுவோம் - டி.கே.சிவகுமார்

அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும் என தெரிவித்தார்.

தினத்தந்தி

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேற்று சந்தித்தார்.

அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார். எனவே, கர்நாடக அரசு காவிரியில் 22.54 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், துணை முதல் - மந்திரி டி.கே.சிவகுமார் கூறுகையில்,

கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம். இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்பேது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும். காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் அதை நிச்சயம் மதிப்போம் என தெரிவித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்