தேசிய செய்திகள்

சீன படைகள் எல்லையில் அத்துமீறினால் பதிலடி தருவோம்: இந்திய விமான படை தளபதி

சீன படைகள் எல்லையில் அத்துமீறினால் பதிலடி தரப்படும் என இந்திய விமான படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் அமைந்த அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த புதன்கிழமை டெசர்ட் நைட்-21 என்ற பெயரில் இந்திய விமான படையின் மெகா பயிற்சி தொடங்கியது.

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தடைந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்து விட்டன. ஜனவரி இறுதிக்குள் மற்றொரு 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமான படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வருகிற 2023ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என கூறினார். கிழக்கு லடாக்கில் சீன படைகள் அத்துமீற கூடிய வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசும்பொழுது, அவர்கள் சீன படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்