தேசிய செய்திகள்

பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் - அமரீந்தர் சிங்

பஞ்சாபில் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அமரீந்தர் சிங் கூறினார்.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளார்.நேற்று அவர் பா.ஜனதாவை சேர்ந்த அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டாரை சந்தித்தார். பின்னர், அமரீந்தர் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. முதல்-மந்திரியுடன் காபி சாப்பிட்டேன். கடவுள் அருளால், பஞ்சாபில்பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம். எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விவசாயிகள் போராட்டத்தில் எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது. அவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து