தேசிய செய்திகள்

ரேபிட் கருவி பரிசோதனையை நிறுத்தியது ராஜஸ்தான் அரசு

பரிசோதனை முடிவுகள் துல்லியமாக கிடைக்காததால் ரேபிட் கிட் டெஸ்ட் கருவி சோதனையை ராஜஸ்தான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஜெய்பூர்,

கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தவறான முடிவை காட்டியதால் பரிசோதனை செய்யும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை மந்திரி ரகு சர்மா கூறுகையில், ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகள் மூலம் 90 சதவீதம் துல்லிய சோதனை முடிவுகள் கிடைக்க வேண்டும். ஆனால், இந்தக்கருவிகள் மூலம் வெறும் 5 சதவீதம் மட்டுமே சரியான தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, ரேபிட் டெஸ்ட் சோதனையை நிறுத்தியுள்ளோம். இது தொடர்பான அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...