தேசிய செய்திகள்

மக்கள்தொகையை கட்டுப்படுத்த கோரும் பொதுநல மனு - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை

மக்கள்தொகையை கட்டுப்படுத்த கோரும் பொதுநல மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதாவை சேர்ந்த வக்கீல் அஸ்வினி குமார் உபாத்யாயா, டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குற்றச்செயல் அதிகரிப்பு, காற்று மாசு, இயற்கை வள பற்றாக்குறை, வேலையின்மை ஆகிய எல்லா பிரச்சினைகளுக்கும் மக்கள்தொகை உயர்வே காரணம். அதை கட்டுப்படுத்தும்வகையில், நீதிபதி வெங்கடாசலய்யா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலையோ, எவ்வித உரிமைகளோ கிடையாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.