தேசிய செய்திகள்

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம்: சிவசேனா

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மும்பை,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பிரதான எதிர்க்கட்சிகள் தற்போது தேர்தல் பணியை தொடங்கிவிட்டன. இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகள் வரை போட்டியிடுவோம் என்று சிவசேனா கட்சி தெரிவித்துளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத் கூறியதாவது; குஜராத் முதல் மந்திரி ராஜினாமா செய்தது அக்கட்சியின் உள்விவகாரம். உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 100 தொகுதிகள் வரை நாங்கள் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். கோவாவை பொறுத்தவரை 20 தொகுதிகள் வரை நாங்கள் போட்டியிட உள்ளோம். அங்கு கூட்டணி அமைத்து போட்டியிடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்