தேசிய செய்திகள்

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.8 லட்சம் கொள்ளை

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

குவாலியர்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் நேற்று ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக வேனில் பாதுகாவலருடன் பணத்தை கொண்டு சென்றனர்.

அப்போது மர்ம நபர்கள் 3 பேர் அந்த வேனை வழிமறித்து துப்பாக்கியை காட்டி மிரட்டி நிறுத்தினார்கள். உடனே வேன் உள்ளே இருந்த பாதுகாவலர் ரமேஷ் தோமர் என்பவர் துப்பாக்கியை எடுத்து அவர்களை சுட முயன்றார். அதற்குள் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பாதுகாவலர் குண்டு பாய்ந்து பலி ஆனார். டிரைவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த நபர்கள் வேனில் இருந்த ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்த தப்பிச் சென்று விட்டனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...