தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி மீண்டும் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி மீண்டும் இன்று பேரணி நடத்தினார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை கண்டித்தும் கடந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. குடியுரிமை திருத்த சட்டத்தை தங்களது மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். தொடர்ந்து 3 நாட்கள் எதிர்ப்பு பேரணி நடத்தி அதிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் கொல்கத்தாவில் நேற்று போட்டி பேரணி நடத்தப்பட்டது. மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா உள்பட பலர் பேரணியில் கலந்து கொண்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு முறையை கண்டித்தும் மம்தா பானர்ஜி தலைமையில் இன்றும் பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் மத்திய அரசு எதிராக மம்தா பானர்ஜி கோஷங்களை எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது