தேசிய செய்திகள்

மேற்கு வங்காள தலைமை செயலாளர் மாற்றம்; தேர்தல் ஆணையம் அதிரடி

மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று இரவோடு இரவாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி மற்றும் உள்துறை செயலாளர் ஜகதீஷ் பிரசாத் மீனா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். தலைமைச் செயலாளர் சக்ரவர்த்திக்குப் பதிலாக துஷ்யந்த் நரியாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் சங்கமித்ரா கோஷ் புதிய உள்துறைச் செயலாளராகப் பொறுப்பேற்பார். தற்போது பணி மாற்றம் செய்யப்பட்ட நந்தினி சக்ரவர்த்தி, ஜகதீஷ் பிரசாத் மீனா தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.