கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை அந்த மாநிலத்தின் தேர்தல் ஆணையம் திவீரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில டி.ஜி.பி. வீரேந்திராவை அந்த மாநிலத்தின் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அவருக்கு பதில் மேற்கு வங்கத்தின் புதிய டி.ஜி.பி.யாக நீரஜ்நயன் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தற்போது டி.ஜி.பி. வீரேந்திரா, மேற்கு வங்க மாநிலத்தின் மின்சார பகிர்மான வாரியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வீரேந்திரா, ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.