தேசிய செய்திகள்

உடல் நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள நிதி மந்திரி பதவி விலக முடிவு?

உடல் நலக்குறைவு காரணமாக மேற்கு வங்காள நிதி மந்திரி அமித் மித்ரா பதவி விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 2011-ம் ஆண்டு முதல் நிதி மந்திரியாக இருப்பவர் அமித் மித்ரா. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிறந்த பொருளாதார நிபுணருமான அவரிடம் தொடர்ந்து 3-வது முறையாக நிதி இலாகா ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 73 வயதான அமித் மித்ராவுக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் பதவி விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகையில், மாநில நிதி மந்திரியாக அமித் மித்ரா தொடர மாட்டார். அரசியலிலும், நிர்வாகத்திலும் தொடர விருப்பம் இல்லை என்பதை கட்சித்தலைமைக்கு அவர் அறிவித்து விட்டார். முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் வற்புறுத்தலால்தான், கட்சி 3-ம் முறையாக ஆட்சிக்கு வந்தபோது நிதி இலாகாவை ஏற்றுக்கொண்டார் என தெரிவித்தார்.

இந்த கருத்தை உறுதி செய்த மற்றொரு தலைவர், அமித் மித்ரா விலகியபின் சிறிது நாட்களுக்கு முதல்-மந்திரியே நிதி இலாகாவை கவனிப்பார் எனவும், அதன் பிறகே புதிய மந்திரியிடம் ஒப்படைப்பார் எனவும் தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்