தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: ஜார்கிராம் தொகுதி பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் ராஜினாமா செய்தார்

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக குனார் ஹெம்ப்ராம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதேவேளை பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராமின் தொகுதி பா.ஜ.க. எம்.பி.யாக இருந்தவர் குனார் ஹெம்ப்ராம். இவர் தனது எம்.பி. பதவி மற்றும் பா.ஜ.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவியை இன்று காலை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குனார், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

குனார் ராஜினாமா தொடர்பாக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ஹெம்ப்ராம் தனது முடிவை சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கு தெரிவித்திருந்தார்.

பா.ஜ.க. ஜார்கிராம் தொகுதியை இழக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்து தான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என டி.எம்.சி. எம்.பி. சாந்தனு சென் விமர்சித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்