தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்தார்

மேற்கு வங்காளம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மிஹிர் கோஸ்வாமி பா.ஜனதாவில் இணைந்தார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காள மாநிலம் கூச்பேகர் தாக்ஷின் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மிஹிர் கோஸ்வாமி. இவர் நேற்று திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகினார். டெல்லியில், பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் கட்சியில் நீண்ட காலமாக அவமதிக்கப்பட்டு வந்தேன். அதை கட்சி தலைமையிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விலகியுள்ளேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப மாநிலத்தில் புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்க பா.ஜனதாவில் சேர்ந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு