கொல்கத்தா
மேற்கு வங்கம் மாநிலம் காரக்பூர் அருகிலுள்ள சக்மரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ரபானி. இவர் பயங்கர தீக்காயங்களுடன் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது கணவர் சவுரப் மற்றும் மாமியார் சுமித்ரா ஆகியோர் இந்தக் கொலை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஷ்ரபானியின் குடும்பத்தினர் காவல்துறையிடம் அளித்த புகாரில், அதிகளவிலான வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவைத்தோம். இரண்டு வருடங்களாக நிறத்தைக் காரணம்காட்டியும், கூடுதல் வரதட்சணை கேட்டும் ஷ்ரபானி கொடுமைக்கு ஆளாகினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஷ்ரபானிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையும் காரணமாக வைத்தும், அந்த பெண் கருப்பாக இருந்ததாலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது எரித்து கொன்றுவிட்டார்கள் என தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மீதான வன்முறை 67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக, மாதர் சங்கத்தினர் தெரிவிக்கின்றார்கள்.