தேசிய செய்திகள்

மேற்கு ரெயில்வேயில் கூடுதலாக 8 ஏ.சி. மின்சார ரெயில் சேவை

மேற்கு ரெயில்வேயில் கூடுதலாக 8 ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது.

மும்பை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மின்சார ரெயில் இயக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் மத்திய, மேற்கு ரெயில்வே 100 சதவீதம் மின்சார ரெயில் சேவையை தொடங்கியது.

தற்போது 2 டோஸ் தடுப்பூசி போட்ட அனைவரும் மின்சார ரெயில்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மேற்கு ரெயில்வேயில் விரார், போரிவிலி - சர்ச்கேட் இடையே தினந்தோறும் 12 ஏ.சி. மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு ரெயில்வேயில் கூடுதலாக மேலும் 8 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பயணிகளின் வசதிக்காக வரும் 22-ந் தேதி முதல் கூடுதலாக மேலும் 8 புதிய ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை 20 ஆக அதிகரிக்கும் என்றார். மும்பையில் தற்போது மத்திய ரெயில்வே வழித்தில் 26 ஏ.சி. மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...