இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்து கூறியிருப்பதாவது:-
இலங்கை கடற்படை கப்பலுக்கும், இந்திய மீனவர்களின் மீன்பிடி படகுக்கும் இடையே நடந்த மோதலில் 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக நமது கடுமையான கண்டனத்தை இலங்கையில் உள்ள இந்திய தூதர் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியிடம் தெரிவித்து இருக்கின்றார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரிடமும் கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்றோம். உயிர்களை இழந்தது குறித்து நமது வேதனையை தெரிவித்ததுடன், மீனவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு, அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறோம்.
2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகளின் விளைவாக, 2 நாடுகளின் வெளியுறவு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்கள் டெல்லியில் நேரில் சந்தித்து பேசினர். இருதரப்பினரும் இணைந்து செயல்படுகின்ற வகையில் ஒரு கூட்டு பணிக்குழு அமைத்து, மீனவர்களின் பிரச்சினைகளை விரிவாக அலசி ஆராய்ந்து தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. அந்தபணிக்குழுவின் 4-வது கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கடல் எல்லை குறித்த மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.