தேசிய செய்திகள்

தலீபான்களுடன் நடந்த சந்திப்பில் பேசப்பட்டது என்ன? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றியபின், கத்தார் தலைநகர் தோகாவில் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுடன் முதல் முறையாக இந்திய தூதர் தீபக் மிட்டல் அதிகாரப்பூர்வ சந்திப்பு ஒன்றில் பங்கேற்றார்.

தினத்தந்தி

தோகாவில் உள்ள தலீபான் அரசியல் அலுவலக தலைவர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்சாயுடன் கடந்த 31-ந்தேதி நடந்த இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதை இந்தியாவின் முதன்மையான மற்றும் உடனடி கவலையாக தீபக் மிட்டல் எடுத்துரைத்ததாக கூறினார்.

இதற்கு, இந்த பிரச்சினை நேர்மறையாக அணுகப்படும் என தலீபான் பிரதிநிதி பதிலளித்ததாகவும் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.

தலீபான்களுடன் மேலும் சந்திப்பு நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு, அது குறித்து எந்த தகவலும் தன்னிடம் இ்ல்லை எனவும் அவர் பதிலளித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்