புதுடெல்லி,
நாகேஸ்வரராவ் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.
இப்போது நாகேஸ்வரராவின் மனைவி மேனம் சந்தியாவின் முதலீடுகளில் முறைகேடு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகார்களை மறுத்து, நாகேஸ்வரராவ் நேற்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனைவியின் முதலீடுகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என கூறி உள்ளார்.
மனைவியின் சொத்துக்கள் விற்பனை, முதலீடுகள் பற்றி உரிய விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், தானும், தன் மனைவியும் மேற்கொள்ளும் பண பரிமாற்றங்கள், முதலீடுகள்பற்றி ஆண்டுதோறும் உரிய அதிகாரிகளிடம் தாக்கல் செய்கிற சொத்து விவர பட்டியலில் குறிப்பிட்டு வந்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.