தேசிய செய்திகள்

நீங்கள் இங்கு சாதித்தது உண்மையில் அசாதாரமாணது பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு

நீங்கள் இங்கு சாதித்தது உண்மையில் அசாதாரமாணது என பிரதமர் மோடிக்கு இவாங்கா டிரம்ப் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பில் நடத்தப்படும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் தொடங்கி வைத்தனர்.

மாநாட்டில் இவாங்கா டிரம்ப் பேசுகையில், நீங்கள் (பிரதமர் மோடி) இங்கு சாதித்து உள்ளது உண்மையில் அசாதாரமாணது. இந்த தொண்மையான நகரம் தொழில்நுட்பத்துடன் ஜொலிப்பது வியக்கத்தக்கது என்றார். முதலாவது பெண்கள், அனைவருக்கும் முன்னுரிமை, என்ற கருத்தகத்துடன் தொடங்கி உள்ள தொழில் முனைவோர் மாநாட்டில் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். பெண்கள் தலைமையிலான 10 நாடுகளின் குழுவும் இதில் கலந்து கொள்கிறது. இவாங்கா பேசுகையில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை இந்தியா நடத்துவது இது முதல்முறையாகும். இருதரப்பு மக்கள் இடையே நட்புறவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நட்புறவை வலுப்படுத்தும் சின்னமாகும். இந்தியாதான் அமெரிக்காவின் உண்மையான நட்பு நாடு என அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே கூறிவிட்டார்.

இந்தியா எங்களையும் உலகம் முழுவதும் உள்ளவர்களையும் மிகவும் உத்வேகப்படுத்துகிறது. புதுமையான திறன் மற்றும் தொழில் முனைவு திறன் மூலம் பாராட்டத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதுபோன்ற தொழில் முனைவோர் மாநாட்டில் முதல் முறையாக 1500 பெண் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டதை பார்த்து மிகவும் பெருமை கொள்கிறேன். பெண் தொழில் முனைவோர்கள் முதலீடு, நெட்வோர்க்ஸ், வளங்கள் மற்றும் சட்டங்களை அணுகும் முறையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

நீங்கள் இங்கு சாதித்தது உண்மையில் அசாதாரமாணது என பிரதமர் மோடியை பாராட்டிய இவாங்கா டிரம்ப், சிறு வயதில் டீ விற்றவர் இப்போது பிரதமர் ஆகி உள்ளீர்கள், நீங்கள் நிலைமாற்ற மாற்றம் சாத்தியமானது என்பதை நிரூபித்து உள்ளீர்கள் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்