தேசிய செய்திகள்

"ஒரு பெண் என்ன அணிய வேண்டுமென்பது அவருடைய விருப்பம்"; ஹிஜாப் கேள்விக்கு ராகுல் பதில்

உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது மாணவி ஒருவர் ஹிஜாப் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ராகுல் காந்தி 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்கிற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ராகுலின் யாத்திரை தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் சென்று கொண்டிருக்கிறது. அங்குள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ராகுல் காந்தியிடம் மாணவி ஒருவர் ஹிஜாப் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

ஒரு பெண் எந்த உடையை அணிய விரும்புகிறார் என்பது அவருடைய விருப்பம். அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. நீங்கள் என்ன அணிகிறீர்கள் என்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எனவே, என்ன அணிய வேண்டும் என்பது உங்களின் முடிவு. மாறாக, நீங்கள் என்ன அணிய வேண்டும் என்பதை வேறு யாரும் தீர்மானிக்க வேண்டும் என்பதாக நான் நினைக்கவில்லை" என்றார். 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை