புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில்,ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கருத்துக்களை வரும் 20ஆ ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.